உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேல்மங்கலம் வி.ஏ.ஓ.,ஆபீஸ் இடிந்து விழும் அபாயம் மழைநீரில் தத்தளிக்கும் பணியாளர்கள்

மேல்மங்கலம் வி.ஏ.ஓ.,ஆபீஸ் இடிந்து விழும் அபாயம் மழைநீரில் தத்தளிக்கும் பணியாளர்கள்

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் வி.ஏ.ஓ., அலுவலகம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மழை பெய்தால் ஆவணங்களை பாதுகாக்க சிரமப்படுகின்றனர். புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேல்மங்கலம் மேலத்தெரு அக்ரஹாரத்தில் வி.ஏ.ஓ.,அலுவலக கட்டடம் 70 ஆண்டு பழமையானது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் மேல்மங்கலம்,அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சிகள், வடுகபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8 வார்டுகள் உள்ளடங்கியது. அலுவலத்தில் 419 எக்டேர் நஞ்சை, 739 எக்டேர் புஞ்சை, 42 எக்டேர் நத்தம்புறம்போக்கு, 179 எக்டேர் புறம்போக்கு உட்பட 1459 எக்டேர் விபரம் வி.ஏ.ஓ., அலுவலக கணக்கில் உள்ளது. 21 ஆயிரம் மக்களுக்கு தேவையான வருவாய், இருப்பிடச் சான்று, வாரிசு சான்றிதழ் மற்றும் சமூக நலத்துறை கீழ் செயல்படும் அரசின் திட்டங்களின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதற்குரிய விபரங்கள் கேட்டு தினமும் மக்கள் அதிகளவில் வி.ஏ.ஓ., அலுவலகம் வந்து செல்கின்றனர்.இடியும் நிலையில் கட்டடம்: வி.ஏ.ஓ., அலுவலகம் 70 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடம் என்பதால் அதன் மேற்கூரை கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலர்கள், பொதுமக்கள் அச்சத்துடன் அலுவலகம் வந்து செல்கின்றனர். வி.ஏ.ஓ., முருகன் கூறுகையில், 'மழை பெய்தால் கட்டடம் மேற்கூரையிலிருந்து மழை நீர் அலுவலகத்தில் விழும். பாதுகாப்பு செய்வதை உறுதி செய்வோம். நாற்காலி, மேஜைகளை மழை நீர் விழாத இடத்திற்கு மாற்றுவோம். அந்த நேரங்களில் பொதுமக்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கின்றனர். இடிந்து விழும் நிலையில் கட்டடம் உள்ளது. இது குறித்து மேலதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன்' என்றார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை