உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குவாரி நடைசீட்டு ஆன்லைனில் வழங்க கனிம வளத்துறை ஏற்பாடு

குவாரி நடைசீட்டு ஆன்லைனில் வழங்க கனிம வளத்துறை ஏற்பாடு

தேனி:மணல், கல் குவாரி நடைசீட்டுகளை ஆன்லைன் மூலம் வழங்கும் நடைமுறைகளை கனிமவளத்துறை துவங்கி உள்ளது.தமிழகத்தில் செயல்படும் மணல், கல் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு நடைசீட்டு வழங்கி கொண்டு செல்லப்படுகிறது. இந்த நடைச்சீட்டில் குவாரி குத்தகைதாரர் பெயர், குவாரி உள்ள முகவரி, தேதி, எத்தனை யூனிட் எடுத்து செல்லப்படுகிறது என்ற விபரங்கள் அடங்கி இருக்கும். இந்த நடைச்சீட்டு கட்டணம் செலுத்தி கனிம வளத்துறை அலுவலகங்களில் முத்திரை வைத்து வழங்கப்படும். இதில் முறைகேடுகள் ஏற்படுவதாகவும், கூடுதலாக செலவு செய்ய வேண்டி உள்ளதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் நடைசீட்டுகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஆன்லைனில் பணம் செலுத்தும் நடைமுறை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.இதற்காக அனைத்து மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளுக்கும் சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ஆன்லைனில் நடைசீட்டு வழங்கும் நடைமுறை பயன்பாட்டிற்கு வர உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை