உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி தொடர் சாதனை

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி தொடர் சாதனை

கம்பம் : பிளஸ் 2, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம், அதிக மதிப்பெண்கள், நூறு சதவீத தேர்ச்சி என பல்வேறு சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது.இப்பள்ளி மாணவி ஜெஸ்லின் பாத்திமா, மாணவன் விஷ்ணு பாண்டி ஆகியோர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600 க்கு 591 பெற்று தேனி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 182 மாணவ மாணவிகள் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்று நூறு சதவீத தேர்ச்சி என்ற தொடர் சாதனையை இப்பள்ளி பெற்றுள்ளது.10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி லட்சணா 500 க்கு 496 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். மாணவர்அஜய் 495 பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தனர். மாணவி யாசிகா 494 பெற்று பள்ளியில் மூன்றாம் இடம் பெற்றார்.490க்கு மேல் 6 பேர், 480 க்கு மேல் 20, 450 க்கு மேல் 59 பேர், 400 க்கு மேல் 103 பேர் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஆங்கிலத்தில் 3 பேர், கணிதத்தில் 15 பேர், அறிவியலில் 10 பேர், சமூக அறிவியலில் இருவர் என நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர்.சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் காந்த வாசன், இணை செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன், யோகா ஆசிரியர்கள் துரைராஜேந்திரன், ரவிராம் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.மாணவர்களிடம் பேசிய தாளாளர் காந்த வாசன், '10ம் வகுப்பு தேர்வு ஒரு திருப்பு முனை. மேலும் இது ஒரு துவக்கம். இனிமேல் தான் கடுமையாக உழைக்க வேண்டும். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதிக்க கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுக்கு உதவ ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். இணை செயலர் சுகன்யா தலைமையில் ஆசிரியர் குழு ஒன்று சுமாரான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் கல்வியாண்டில் மாநில அளவில் ரேங்கிங் பெற முயற்சிப்போம்.', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்