/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழ் சினிமா துறையில் பாலியல் தொல்லை இல்லை: நடிகர் ஜீவா தேனி நடிகர் ஜீவா பேட்டி
தமிழ் சினிமா துறையில் பாலியல் தொல்லை இல்லை: நடிகர் ஜீவா தேனி நடிகர் ஜீவா பேட்டி
தேனி: தமிழ் சினிமா துறையில் பாலியல் தொல்லை இல்லை என தேனியில் நடிகர் ஜீவா தெரிவித்தார்.தேனியில் ஜவுளி கடை திறப்பு விழாவில் நடிகர் ஜீவா பங்கேற்றார். பின் நிருபர்களிடம் அவர் கூறியவதாது: பாலியல் தொல்லை கொடுப்பது தவறானது. ஏற்கனவே மீ டூ என குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. அதே தொடர்ச்சியாக தற்போது புகார்கள் வெளிவருகின்றன. சினிமாவில் ஆரோக்கியமான சூழல் இருந்தால் நன்றாக இருக்கும். பலதுறைகளில் பல விஷயங்கள் நடக்கின்றன. நல்ல சூழலை வைத்து கொள்வது தான் நடிகர்களின் பணி. தமிழ் சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் இல்லை என்றார். வாக்குவாதம்
டி.வி., நிருபர் ஒருவர் மீண்டும் மீண்டும் அவரிடம் கேள்வி கேட்டதால், ஜீவா கடுமையான வார்த்தையை அந்த நிருபரை நோக்கிக் கூறினார். இதனால் அந்த நிருபர் ஜீவாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.