உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வ.உ.சி., பிறந்தநாள் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

வ.உ.சி., பிறந்தநாள் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

போடி: போடியில் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் ஓ.பி.எஸ்., அணி மாவட்ட தலைவர் பொன்னுபிள்ளை, நகர அவைத் மணிகண்டன், முன்னாள் நகர செயலாளர் ஜெயராம் பாண்டியன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஐக்கிய பிள்ளைமார்கள் சங்கம் சார்பில் தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் சமூகத்தினர் போடி பஸ் ஸ்டாண்டில் துவங்கி பி.ஹெச்., ரோடு வழியாக சென்று வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செயலாளர் நீலமேகம், பொருளாளர் நாகராஜ் பலர் பங்கேற்று இனிப்புகள் வழங்கினர்.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் புருசோத்தமன் தலைமையில் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நகராட்சி முன்னாள் துணை தலைவர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.காங்., சார்பில் நகர தலைவர் முசாக் மந்திரி தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், நகர பொது செயலாளர் அரசகுமார் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.கம்பம்: - வ.உ.சி. யின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காந்தி சிலை அருகில் வேலப்பர் வேளாளர் சங்க கட்டடத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு வேலப்பர் வேளாளர் சங்க தலைவர் காந்தவாசன், செயலாளர் சந்தனகுமார், பொருளாளர் சோமசுந்தரம், இணை செயலாளர் ரவிராம், யோகா ஆசிரியர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.எல். ஏ, ராமகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகளுடன் வந்து வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தார். வ.உ.சி. வேளாளர் சங்க தலைவர் திருமலை சங்கர், ஆதிசக்தி விநாயகர் சங்க தலைவர் முருகேசன், கம்பராயப்பெருமாள் சங்க தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். சின்னமனூரில் சீப்பாலக் கோட்டை ரோட்டில் உள்ள வ.உ.சி. சிலை மற்றும் வேளாளர் வெற்றிலை கொடிக்கால் சங்க கட்டடத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. உத்தமபாளையத்திலும் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !