உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலி பட்டா மூலம் இடத்தை ஆக்கிரமித்து கொலைமிரட்டல் * இருவர் கைது

போலி பட்டா மூலம் இடத்தை ஆக்கிரமித்து கொலைமிரட்டல் * இருவர் கைது

தேனி:தேனி கெங்குவார்பட்டி ஆனந்தகுமார் உள்ளிட்டோரின் இடங்களை போலிபட்டா மூலம் ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஜி.கல்லுப்பட்டி செல்வம் 46, மைக்செட் உரிமையாளர் வீரமணி 35, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.தேனி கெங்குவார்பட்டி ஆனந்தகுமார். இவரும், நண்பர் மலைச்சாமியும் இணைந்து ஜி.கல்லுப்பட்டி சுஜிதாவின் 544 சதுர அடி இடத்தை வாங்கினர். அந்த இடத்தையும் சேர்த்து 1308 சதுர அடிக்கு போலி பட்டாவை செல்வம் தயார் செய்து, வீட்டு வரி ரசீதும் பெற்றார். பின்னர் செல்வம் அந்த இடத்தை வத்தலகுண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது உறவினர்கள் ஆசைத்தம்பி, ராஜூ, வீரமணி, நாகபாண்டி, ஆண்டிசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் பெயரில் கிரையம் செய்து கொடுத்தார். செல்வம் உள்ளிட்டோர் ஆனந்தகுமார் இடத்தில் அத்துமீறி நுழைந்து அவர் அமைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள குடிசை, வேலிகளை அகற்றினர். இதனை தட்டி கேட்டதற்கு கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஆனந்தகுமார் தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., லதா தலைமையிலான மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் செல்வம், வீரமணி ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ