உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பறிமுதல் செய்யாத பறக்கும் படை மீது நடவடிக்கை எச்சரிக்கையால் அலுவலர்கள் அச்சம்

பறிமுதல் செய்யாத பறக்கும் படை மீது நடவடிக்கை எச்சரிக்கையால் அலுவலர்கள் அச்சம்

கம்பம் : லோக்சபா தேர்தல் ஏப். 19 ல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் உச்சபட்ச பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த பறக்கும் படை, நிலை குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 பறக்கும் படை 24 மணி நேரமும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது . ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணம் மற்றும் பரிசு பொருள்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.வேட்புமனு தாக்கல், இறுதி வேட்பாளர் பட்டியல் , பிரசாரம் என மூன்று வாரங்களை கடந்து விட்டது. இன்னமும் 10 நாட்களே உள்ளது. ஆனால் பறக்கும் படை இதுவரை பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யவில்லை. கண்டிப்பாக பறிமுதல் செய்ய வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளனர்.இதனால் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். 4 பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்து போடி தாலுகா அலுவலகம் சென்று கொடுத்த போது தாசில்தார் முதலில் மறுத்து பின் வாங்கியுள்ளார். உரியவரை அழைத்து விசாரித்த போது, பேத்தி சடங்கிற்கு வாங்கி சென்றேன். சடங்கு முடிந்து விட்டது. இனி நீங்களே பட்டாசை போட்டுக் கொள்ளுங்கள் என கூறி சென்று விட்டாராம். இதுபோன்ற காமெடி காட்சிகளும் அரங்கேறி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ