உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுரை - - போடி அகல ரயில் பாதையில் பாலம், டிராக் குறித்து அதிகாரிகள் ஆய்வு

மதுரை - - போடி அகல ரயில் பாதையில் பாலம், டிராக் குறித்து அதிகாரிகள் ஆய்வு

போடி : மதுரை --- போடி அகல ரயில் பாதை வழித் தடத்தில் மின் மயமாக்கல் பணி நிறைவு பெற்ற நிலையில் தெற்கு ரயில்வே துணை பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.மதுரை -- போடி இடையே 2023 அக்.12 ல் 110 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. அதன் பின் இத் தடம் 25 ஆயிரம் வோல்ட் மின் பாதையாக மாற்றி மார்ச் 23 ல் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடந்தது. மின் வழித்தடத்தில் மூன்று மாதங்களாக சோதனை நடந்தன.பணிகள் முடிந்து ஜூன் 16 ல் மதுரையில் இருந்து 121 கி.மீ., வேகத்தில் 3 பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் 7 நிமிடங்களில் போடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது.இந்த ஆய்வு ரயிலில் கணினி, ஜி.பி.எஸ்., கருவியுடன் கூடிய அகல ரயில் பாதையில் அதிர்வுகளை கண்டறியும் வகையில் 'ஆசிலேசன் மானிட்டரிங் சிஸ்டம்' (Oscillation Monitoring System) என்ற தொழில் நுட்பத்துடன் மதுரை - போடி வழித்தடத்தில் 121 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் அதிர்வுகள் நிமிடத்திற்கு நிமிடம் ஆய்வு செய்து விபரங்கள் சேகரிக்கப்பட்டன. 10 நாட்களுக்கு முன்பு மதுரை - போடி அகல ரயில் பாதையில் 120 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.நேற்று தெற்கு ரயில்வே துணை பொது மேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா மதுரை - போடி இடையே அமைக்கப்பட்டு உள்ள ரயில்வே பாலங்கள், சப்வே, டிராக், பிளாட்பாரம், போடி புதுக்காலனி சப்வே - யின் இருபுறமும் ரோடு அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். உடன் முதுநிலை மேலாளர் பிரசன்ன குமார் (போக்குவரத்து) தொலை தொடர்புதுறை உதவி மேலாளர் அசோக்குமார், கோட்ட மின்னணு பொறியாளர் ரோகன், கட்டுமானத்துறை பொறியாளர்கள் வெள்ளைத்துரை, முத்தையா உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை