உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்கள் ஐ.டி.ஐ.,யில் படிக்க ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

பெண்கள் ஐ.டி.ஐ.,யில் படிக்க ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

ஆண்டிபட்டி : 'எட்டு, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆண்டிபட்டி அரசு பெண்கள் ஐ.டி.ஐ., தொழில் பிரிவு படிப்புகளுக்கு ஆன்லைன், நேரடியாக விண்ணப்பிக்கலாம்.' என, ஐ.டி.ஐ., முதல்வர் சரவணன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆண்டிபட்டி அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் தையல் தொழில் பிரிவுக்கும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், திட்டமிடுதல் உதவியாளர், ஸ்மார்ட் போன் டெக்னீசியன், ஆப் டெஸ்டர், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சாதனங்கள் பராமரிப்பு, ஜவுளி இயந்திர மின்னணுவியல், குளிர் பதன தட்ப வெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழில் பிரிவுகள் படிக்க விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ.,யில் சேரும் மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையாக மாதம் ரூ.750, விலையில்லா சீருடை, காலணி, பாடப்புத்தகம், வரைபட உபகரணம் ஆகியவை வழங்கப்படும். பயிற்சி கட்டணம் இல்லை. ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாத உதவித் தொகையாக ரூ.1000 கிடைக்கும். இந்த ஆண்டிற்கான புதிய மாணவியர் சேர்க்கை ஆன்லைன் மூலம் மே 19 முதல் துவங்க உள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவிகள் ஆன்லைன் மூலமாகவோ, ஐ.டி.ஐ.,யில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546 - 290816, 93440 14240, 88385 22077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ