மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
9 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
12 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
12 hour(s) ago
மூணாறு: தமிழகத்தில் லோக்சபா தேர்தலையொட்டி, கேரளாவில் எல்லையோர மாவட்டங்களில் சில தாலுகாக்களில் மதுபான கடைகளை மூடுமாறு தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைத்தது. அதன்படி எல்லையோரப் பகுதிகளில் ஏப்.17ல் மாலை 6:00 மணிக்கு மதுபான கடைகள் மூடப்பட்டன. இன்று மாலை 6:00 மணிக்கு கடைகள் திறப்பதாக இருந்தது.இந்நிலையில் அந்த உத்தரவு அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தது எனவும் உத்தரவு தவறாகி விட்டது என கூறி மூணாறு உள்பட சில பகுதிகளில் அரசு மதுபான கடைகள், தனியார் பார்கள் நேற்று திறக்கப்பட்டன. தொடர்ந்து மூன்று நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என்ற அரசு உத்தரவால் கவலை அடைந்த குடி மகன்கள் கடைகள் திறக்கப்பட்டதும்' குஷி' அடைந்தனர்.ஏமாற்றம்: மூணாறில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை நடத்துகின்றனர். அவர்கள் மதுபான கடைகள் மூன்று நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதால் விற்பனைக்கு மதுபானங்களை பெரும் அளவில் வாங்கி இருப்பு வைத்தனர்.திடீரென கடைகள் திறக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.
9 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago