உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காலாவதியான தராசு பயன்பாடு: எடை குறைவால் மக்கள் ஏமாற்றம்

காலாவதியான தராசு பயன்பாடு: எடை குறைவால் மக்கள் ஏமாற்றம்

போடி : போடி வாரச்சந்தை, தினசரி மார்க்கெட்டில் காலாவதியான தராசுகளை பயன்படுத்தி வருவதால் பொருட்களின் எடை குறைவாக உள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.போடியில ஞாயிற்று கிழமை நடக்கும் வாரச்சந்தை, பரமசிவன் கோயில் ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட், போடி அருகே சிலமலையில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல் படுகின்றன. இங்கு ஏராளமான வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களிடம் பெரும்பாலும் முத்திரையிடப்படாத காலாவதியான தராசுகள் பயன்படுத்துகின்றனர். அவற்றில் எடையிடும்போது எடை குறைவாக உள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. இதனை கண்காணிக்க போடியில் தனி அலுவலகம், அதிகாரிகள் இருந்தும் யாரும் கண்டு கொள்வதில்லை. வாரச்சந்தை, தினசரி மார்க்கெட்டில் தராசுகளின் நிலை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ