உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் நாளை பங்குனி உத்திர தேரோட்டம்

பெரியகுளத்தில் நாளை பங்குனி உத்திர தேரோட்டம்

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நாளை மாலை தேரோட்டம் நடக்கிறது.இக் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மார்ச் 15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் திருஞானசம்பந்தருக்கு பால் ஊட்டும் விழா 6ம் நாள் திருவிழா கணக்கு வேலாயி அம்மாள் மண்டபத்தில் நடந்தது. பஞ்சமூர்த்திகளான பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்தநாயகி, விநாயகர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு அலங்கரிக்கப்பட்டு மண்டகப்படி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் காட்சியளித்தனர். முக்கிய நிகழ்வாக திருஞானசம்பந்தருக்கு,அறம் வளர்த்த நாயகி அம்மன் ஞானப்பாலூட்டும் ஐதீகம் நிகழ்வினை அர்ச்சகர் தினேஷ் செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு உறுப்பினர் சிதம்பர சூரியவேலு குடும்பத்தினர் செய்திருந்தனர். முக்கிய திருவிழாவான தேரோட்டம் நாளை (மார்ச் 23) மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை