உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் குடிநீர் தட்டுப்பாடு தவிக்கும் பொதுமக்கள்

மூணாறில் குடிநீர் தட்டுப்பாடு தவிக்கும் பொதுமக்கள்

மூணாறு: குடிநீர் திட்டங்களுக்கு ரூ. பல கோடி செலவழித்தும், அதற்கு போதிய வசதிகள் இருந்தும் மூணாறு காலனி மக்கள் குடிநீருக்கு தவித்து வருகின்றனர்.மூணாறில் மகாத்மா காந்தி, ராஜீவ் காந்தி, லட்சம், செட்டில்மென்ட், நியூ ஆகிய காலனிகள் ஒரே பகுதியில் உள்ளன. அவற்றில் இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர்.அப்பகுதிக்கு ரூ.பல கோடி செலவில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவை முறையாக நடைமுறை படுத்தாததால் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகின்றது.அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நீண்ட தொலைவில் உள்ள ஓடைகள் உள்பட இயற்கையான நீர் நிலைகளில் இருந்து சொந்த செலவில் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குடிநீருக்கு பயன்படுத்துகின்றனர். தவிப்பு: சொந்தமாக குழாய்கள் அமைத்தும் கோடை, மழை ஆகிய காலங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். கோடையில் நீர்நிலைகளில் நீர் வரத்து குறைந்து விடும் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். மழை காலங்களில் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், குழாய்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும். அதனால் நீர்வரத்து குறைந்தாலும், அதிகரித்தாலும் குடிநீர் இன்றி மக்கள் தவிக்க நேரிடுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை