உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடைப்பந்து  போட்டியில்  பெரியகுளம், கம்பம் அணிகள் வெற்றி

கூடைப்பந்து  போட்டியில்  பெரியகுளம், கம்பம் அணிகள் வெற்றி

தேனி, : தேனியில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம், கம்பம் அணிகள் வெற்றி பெற்றன.தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எல். எஸ்., மில்ஸ் கூடைப்பந்து கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் 18 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று காலை நடந்த போட்டியில் பெரியகுளம் பி.ஓ.பி., அணி, ஆண்டிப்பட்டி மேஜிக் ஸ்டெப் அணிகள் மோதின. இதில் 79க்கு 50 என்ற புள்ளி விகிதத்தில் பி.ஓ.பி., அணி வென்றது. பெரிகுளம் எஸ்.ஜெ.எஸ்.சி., மற்றும் ஜேம்ஸ்நைஸ்மித் அணிகள் மோதின. இதில் 69க்கு 39 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் எஸ்.ஜெ.எஸ்.சி., அணி வென்றது. தேனி எல்.எஸ்., மில்ஸ் அணி, பெரியகுளம் கேபிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் 86க்கும் 66 என்ற புள்ளியில் எல்.எஸ்., மில்ஸ் அணி வென்றது. மற்றொரு போட்டியில் கம்பம் பென்னிகுவிக் அணி, வடுகபட்டி அணிகள் மோதின. இதில் 94க்கும் 89 என்ற புள்ளிகள் விகிதத்தில் கம்பம் அணி வென்றது.மாலையில் நடந்த லீக் போட்டியில் பெரியகுளத்தை சேர்ந்த பி.ஓ.பி., மற்றும் எஸ்.ஜெ.எஸ்.சி., அணிகள் மோதின. இதில் பி.ஓ.,பி., அணி 92க்கும் 73 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை