உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநிலத் துணைத் தலைவர் அய்யனார் தலைமையில் நிர்வாகிகள் ஆர்.டி.ஓ., ஜெயபாரதியிடம் மனு அளித்தனர்.அதில், 'பட்டியல், பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன.மாவட்டத் தலைவர் ஜெயராம், நிர்வாகிகள் செல்லத்துரை, சுசிமணிவாசகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி