உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மருத்துவ வசதியில்லாத மேகமலை அவதியில் தோட்ட தொழிலாளர்கள்

மருத்துவ வசதியில்லாத மேகமலை அவதியில் தோட்ட தொழிலாளர்கள்

சின்னமனூர்: மேகமலை பகுதி கிராமங்களில் மருத்துவ வசதிக்காக 50 கி.மீ.தூரம் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை தொடர்கிறது.சின்னமனூரிலிருந்து கிழக்கு பகுதியில் மேகமலை உள்ளது. இங்கு ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு உள்ளிட்ட மேகமலை கிராமங்கள் உள்ளன. சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றுகின்றனர்.இவர்களை தவிர தனியார் எஸ்டேட்டுகளும் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. துணை சுகாதார நிலையம் ஹைவேவிஸ் மற்றும் மகாராஜா மெட்டு பகுதிகளுக்கு இரண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.அதில் ஹைவேவிஸ் சமீபத்தில் அமைச்சர் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். மகாராசா மெட்டுக்கு கட்டட வசதி இல்லை. இரண்டு துணை சுகாதார நிலையங்களுக்கும் இரண்டு கிராம செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் வசதியில்லாததால் சின்னமனூர் பகுதியில் இருந்து தினமும் வந்து செல்கின்றனர்.இரவில் பிரசவம், மாரடைப்பு போன்ற அவசர மருத்துவ உதவிதேவைப்பட்டால் குறைந்தது 50 கி.மீ. பயணம் செய்து சின்னமனுார் வர வேண்டும். முதலுதவிக்கு கூட டாக்டர்கள் கிடையாது. அதற்குரிய ஆம்புலன்ஸ் வாகன வசதிகளும் கிடையாது. எனவே டாக்டர், செவிலியர், அவசர சிசிக்சைக்குக்கு தேவைப்படும் உபகரணங்களுடன் மருத்துவமனை மேகமலை பகுதியில் அமைக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ