மூன்று பேர் மீது போக்சோவில் வழக்கு
பெரியகுளம் : பள்ளி மாணவியை காதலிப்பதாக தொந்தரவு செய்தவர் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான 10 ம் வகுப்பு மாணவி. இவரை நவீன் 22, என்ற வாலிபர்காதலிப்பதாக பின் தொடர்ந்துள்ளார். இவரது நண்பர் விஜய் 22, உடந்தையாக இருந்துள்ளார். மாணவியின் தந்தை இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளார். மீண்டும் மாணவியை பின் தொடர்ந்தது தொந்தரவு செய்துள்ளனர். மேலும் நவீன் தந்தை நாகராஜ் 50, மாணவியின் தந்தையை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன், மாணவியை தொந்தரவு செய்த நவீன், விஜய், நாகராஜ் ஆகிய மூவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.-