போலீஸ் செய்திகள்.....
தம்பதி மாயம்தேனி: ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் 38, ஆண்டிபட்டியில் டைல்ஸ் கட்டிங் மிஷின் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி சரண்யா 35. இருவரும் வடபுதுப்பட்டியில் உள்ள சரண்யாவின் தாய் நாகம்மாள் வீட்டிற்கு வந்தனர். கடனாக ரூ. 70 லட்சம் வாங்கி உள்ளதாகவும், அதனை சமாளிக்க முடியாமல் உள்ளதாக நாகம்மாளிடம் பெருமாள் கூறினார். பின் கணவன், மனைவி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றனர். தம்பதி பிச்சம்பட்டிக்கும் செல்லவில்லை, வடபுதுப்பட்டிக்கும் திரும்பவில்லை. நாகம்மாள் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.கொலை மிரட்டல்: விடுத்தவர் கைதுதேனி: பழனிசெட்டிபட்டி குரு ஐயப்பன், சிவசேனா கட்சி மாநில துணைத்தலைவராக உள்ளார். இவர் கடந்த மாதம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மனு அளிக்க உள்ளதாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டார். அதே குழுவில் உள்ள கரூர் கோவிந்தம் பாளையம் சரவணன் 48, கொலைமிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீசில் குரு ஐயப்பன் புகார் செய்தார். போலீசார் விசாரித்து சரவணனை கைது செய்தனர்.தடுமாறி விழுந்த முதியவர் பலிதேனி: சிவராம் நகர் பெருமாள் 60, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள லாட்ஜில் பணிபுரிந்தார். பணிமுடிந்து வீடு திரும்பியவர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள ஓடைத்தெருவில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். சிகிச்சைக்காக தேனி மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மகள் சரண்யா புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.