உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

கணவர் மாயம்: மனைவி புகார்தேனி: பெரியகுளம் சில்வார்பட்டி வடக்கு காலனி காமாட்சி மகன் அஜித் 26. இவரது மனைவி சத்தியாவுடன் 23, தேனி சொக்கத்தேவன்பட்டியில் வசித்தனர். இத்தம்பதிக்கு மூன்று வயது மகன் உள்ளார். அஜித் வடுகபட்டியில் லோடுமேன் வேலை பார்த்தார். இந்நிலையில் மார்ச் 3ல் வீட்டை விட்டு சில்வார்பட்டிக்கு சென்று வருவதாக சென்றவர், வீடு திரும்பவில்லை. கணவரை கண்டுபிடிக்க சத்தியா அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.போதைக்கு ஆளானதால் நகைகளை இழந்த பரிதாபம்தேனி: ஆண்டிபட்டி எம்.சுப்புலாபுரம் ரமேஷ் 37. கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிகிறார். மார்ச் 2 இரவு 11:00 மணிக்கு மது போதையில், உறவினர் ஜெயராஜ் வீட்டிற்கு செல்லும் வழியில், பழனிசெட்டிபட்டியில் சீமான், சித்தார்த், மேலும் இருவரை சந்தித்தார். அவர்களிடம், இந்த ஏரியாவில் உல்லாசமாக இருக்க பெண்கள் இருககிறார்களா என கேட்டுள்ளார். இதனால் அனைவரும் மதுவாங்கி கொடுத்துள்ளார்.அனைவரும் குடித்த பின், ரமேஷை ஆட்டோவில் ஏற்றி சுற்றிவந்தனர். ரமேஷூக்கு அளவுக்கு அதிகமாக போதை ஏறியதால், நிதானம் இழந்தார். இதனை பயன்படுத்தி, நால்வரும் ரமேஷ் கழுத்தில் அணிந்திருந்த ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள மூன்றரை பவுன் தங்கச்செயின், சட்டைப் பாக்கெட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை பறித்து, பழனிசெட்டிபட்டியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். ரமேஷ் போதை தெளிந்த பின் போலீசில் புகார் அளித்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி