குமுளி மலைப் பாதையில் பாலிதீன் கழிவுகள் அகற்றம்
கூடலுார் : தமிழ்நாடு வனத்துறை, அகில இந்திய வன மேம்பாட்டு இயக்கம், ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி இணைந்து வனப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. தமிழக கேரள எல்லை குமுளியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் வனநலம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து மலைப்பாதையின் இரு பகுதிகளிலும் குவிந்திருந்த குப்பை, பாலிதீன் கழிவுகள், மதுபாட்டில்களை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட மூடைகளை கூடலுார் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. வன மேம்பாட்டு இயக்க தலைவர் சதீஷ்குமார், மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின், வனவர் ரகுபதி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஜஸ்டின், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.