கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
தேனி : பெரியகுளம் தாலுகா ஜல்லிபட்டியில் உள்ள பெத்தணசாமி கோயில் திருவிழா தொடர்பாக உள்ள பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சருத்துப்பட்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். போலீசார் அவர்களை விசாரித்த போது திடீரென தரையில் அமர்ந்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த அலுவலர்கள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.