நாளை மக்கள் தொடர்பு முகாம்
தேனி: தேனி தாலுகா வீரபாண்டி வருவாய் கிராமம் உட்கடை வயல்பட்டியில் நாளை (செப்.,11) காலை 11:00 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது. தேனி தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், உதவித்தொகை, விபத்து நிவாரணம், வேளாண், போக்குவரத்துத்துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.