உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆவணி அமாவாசையில் அஞ்சநேயருக்கு பூஜை

ஆவணி அமாவாசையில் அஞ்சநேயருக்கு பூஜை

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயருக்கு பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்பட 21 வகை அபிஷேகம் செய்து மலர் அலங்காரம், வடை மாலை சாத்தி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.ஆண்டிபட்டி தெப்பம்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வேலப்பரை வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ