குவாரிகள் வேலை நிறுத்தத்தால் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு
தேனி: மாவட்டத்தில் டிரான்ஸ்சிட் எனப்படும் நடைச்சீட்டு வழங்கும் முறையில் உள்ள தாமதம், ஆவணங்களுடன் ஜல்லி, மணல் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிவதை கண்டித்து குவாரிகள், கிரஷர் உரிமையாளர்கள் மார்ச் 4 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணிகளில் தொய்வு உள்ளது. மூலப்பொருட்கள் கிடைக்காததால் பலரும் கட்டுமான பணியை நிறுத்திவைத்துள்ளனர். தொழிலாளர்கள் வேலை இழப்புஏற்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் வழக்கம் போல் செயல்பட மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.