மேலும் செய்திகள்
அரசு பள்ளி ஆண்டு விழா; கலை நிகழ்ச்சி அசத்தல்
07-Mar-2025
பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 70 வது ஆண்டு விழா நடந்தது. வர்த்தக பிரமுகர் கவிதாலயா சரவணன் தலைமையில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்தாஸ், பி.டி.ஓ., ராகவன், லட்சுமிபுரம் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை ரேணுகாதேவி வரவேற்றார். திண்டுக்கல் மாவட்ட நீதிபதி கருணாநிதி, கம்மவார் சங்க பொருளாளர் போத்திராஜ், வர்த்தக பிரமுகர் ரத்தினவேல் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆசியர்கள், ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
07-Mar-2025