மேலும் செய்திகள்
தேசிய மக்கள் நீதி மன்றத்தில் வழக்குகள் தீர்வு
16-Sep-2024
உத்தம பாளையம்: உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த லோக் அதாலத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத 505 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதியுமான சிவாஜி செல்லையா தலைமை வகித்தார். உத்தமபாளையம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜசேகர், மாஜிஸ்திரேட் ராமநாதன் ஆகியோர் இந்த அமர்வை பகிர்ந்து கொண்டனர். சமரச தீர்வுக்கான விசாரணையில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், குடும்ப பிரச்னை, காசோலை மோசடி வழக்குகள், அசல் வழக்குகள், மேல் முறையீடு வழக்குகள், பிணை கைதிகள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டு அபராதம் கட்டுதல் என மொத்தம் 505 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. தீர்வுத் தொகையாக ரு.3 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரத்து 602க்கு உத்தரவு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சட்ட உதவி மையத்தின் இளநிலை நிர்வாக உதவியாளர் சசிதர் செய்திருந்தார். நிகழ்வில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
16-Sep-2024