மாவட்ட சி.பி.சி.ஐ.டி., பிரிவில் போலீசார் பற்றாக்குறை: விசாரணை, குற்றவாளிகளை கைது செய்வதில் தொய்வு
தேனி: தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீஸ் பிரிவில் கூடுதல் போலீசார் இன்றி பணிகளை விரைந்து முடிக்க முடியாமலும், குற்ற வழக்குகளில் புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.இம்மாவட்டத்தில் இயங்கி வரும சி.பி.சி.ஐ.டி., (கிரைம் பிராஞ்ச் கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மென்ட்) என்பது மாநிலத்தில் முக்கிய குற்ற வழக்குகளைபுலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முக்கிய அமைப்பாகும். மதுரை மண்டல டி.எஸ்.பி. கட்டுப்பாட்டில், தேனி மாவட்டத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., ஏட்டு, போலீசார், இன்ஸ்பெக்டரின் டிரைவர், எழுத்தர் என 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.ஆனால் குறைந்தபட்சம் 20 பேர் இருக்க வேண்டும்.மேலும்இப்பிரிவிற்கு குறைந்தபட்சம் சொந்த கட்டடம் இன்றி அலுவலகம் சமதர்மபுரத்தில் வாடகை கட்டடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதனால் வழக்கு விசாரணை கைதிகளை ஒரே நேரத்தில் இருவர், மூவர் என கையாள்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.இப்பிரிவின் சார்பில்தேனியில் மருத்துவக் கல்லுாரியில் மாணவர்கள் 'நீட்' ஆள்மாறாட்ட வழக்கு, அரசு நில அபகரிப்பில் 4 வழக்குகள், இருமோசடி வழக்குகள், தேனியை சேர்ந்த மெக்கானிக் காணவில்லை என அவரது மனைவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில்'ஆட்கொணர்வு'மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில்நீதிமன்றம் கணவரை கண்டறிய சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டது. அந்த மெக்கானிக்கையும் தேடி வருகின்றனர். இதுபோன்ற பல முக்கிய வழக்குகள் விரைவாக விசாரித்து வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் பெரும் சுணக்கம் நிலவுகிறது.இதனால் வழக்குகளில் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் பிரிவிற்கு தேவையான எண்ணிக்கையில்கூடுதல்போலீசார்களை நியமிக்கஅத்துறையின் எஸ்.பி., கூடுதல் டி.ஜி.பி.,யிடம் கோரிக்கை வைத்து போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.