உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தென் மாவட்ட யோகா போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தென் மாவட்ட யோகா போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

கம்பம் : கம்பத்தில் நேற்று தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.போட்டிக்கு மாவட்ட யோகாசன சங்க தலைவர் காந்த வாசன் தலைமை வகித்தார். உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டு வேலன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். ரிஷி அறக்கட்டளை தலைவர் துரைராஜேந்திரன் வரவேற்றார்.சூப்பர் சீனியர் பிரிவில் கம்பம் நாகமணியம்மாள் பள்ளி வெற்றி பெற்றது. சீனியர் பிரிவில் பேர்லேண்ட் பள்ளியும், ஆண்டிபட்டி இந்து மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. ஜூனியர் பிரிவில் சிவகங்கை தேவி மெட்ரிக் பள்ளி, கூடலுார் ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளி, சப் ஜூனியர் பிரிவில் டைனி பார்க் பள்ளி, சிஷ்யா அகடாமி பற்றி பெற்றது. சிறப்பு பிரிவில் திருமங்கலம் கேபி.என் மெட்ரிக் பள்ளி, காமயகவுண்டன்டன்பட்டி கஸ்தூரிபாய் பள்ளி பெற்றது.முன்னோக்கி வளைதல் பிரிவில் விருதுநகர் அம்பாள் ராமசாமி மெட்ரிக் பள்ளி, மேலசிந்தலச்சேரி அரசு ஆரம்ப பள்ளி பெற்றது.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அந்தத்த பள்ளிகளில் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை யோகா பயிற்சியாளர் ரவிராம் செய்திருந்தனர். யோகா ஆசிரியர்கள் நடுவர்களாக பணியாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை