உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தென்னிந்திய கராத்தே போட்டி

தென்னிந்திய கராத்தே போட்டி

போடி, : தென்னிந்திய அளவில் நடந்த குங்ஃபூ, கராத்தே போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.தமிழ்நாடு குங்ஃபூ சோட்டகான் கராத்தே சங்கம் சார்பில் தென்னிந்திய அளவிலான குங்ஃபூ, கராத்தே போட்டி ஓசூரில் நடந்தது. போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் போடி நீலமேகம் பிள்ளை அகடாமி சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர். 14 வயதுக்கு கீழ் நடந்த கராத்தே தனித்திறன் கட்டாவில் போடி ஸ்பைஸ் வாலி பப்ளிக் பள்ளி மாணவர் கங்கேஷ், சுருள்வாள் வீச்சில் சிசம் மெட்ரிக் பள்ளி மாணவர் கோகுல் பாலன் முதலிடம் பெற்றனர். 8 வயதுக்கு கீழ் நடந்த குங்ஃபூ தனித்திறன் கட்டாவில் போடி சிசம் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவி ரேணா முதலிடம். 11 வயதுக்கு கீழ் நடந்த டீம் கட்டாவில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி மாணவி சக்தி ஸ்ரீ, போடி திருமலாபுரம் காமராஜ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி பிரகதீசா, தேனி லிட்டில் கிங்டம் பள்ளி மாணவி தேஜா ஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். 14 வயதுக்கு கீழ் நடந்த தனித்திறமை கட்டா போட்டியில் போடி ஜ.கா.நி.. மேல்நிலைப்பள்ளி மாணவர் அன்பரசன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தேனி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் குமார், செயலாளர் சொக்கர் மீனா, சிலம்பாட்ட கழக தொழில் நுட்ப இயக்குநர் நீலமேகம், மாஸ்டர்கள் மோனீஸ்வர், தீபன் சக்கரவர்த்தி, வாஞ்சிநாதன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை