| ADDED : மார் 22, 2024 05:38 AM
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் தேர்தல் முறைகேடுள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தேர்தல் செலவீன பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.இதில் சோழவந்தான்(தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி மக்கள் புகார்களை பார்வையாளர் தர்ம்வீர்தண்டியிடம் 83005 76485என்ற அலைபேசி எண்ணிலும், பெரியகுளம்(தனி), போடி, கம்பம் சட்டசபை தொகுதி மக்கள் புகார்களை பார்வையாளர் விஜேந்திரகுமார் மீனா விடம் 94428 62007 என்ற அலைபேசி எண்ணில் புகார் கூறலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.