மேலும் செய்திகள்
கேரளாவில் பறவை காய்ச்சல்
28-Dec-2025
டாக்டர் பழனியப்பன் நினைவு விருது வழங்கும் விழா
28-Dec-2025
படிக்கட்டை இடித்த 7 பேர் மீது வழக்கு
28-Dec-2025
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
28-Dec-2025
பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி
28-Dec-2025
கம்பம், : ஏலக்காய் சராசரி விலை கிலோவிற்கு ரூ.2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த விலை உயர்வு ஏல விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று புலம்புகின்றனர்.இந்தியாவில் ஏலக்காய் சாகுபடி கேரளாவில் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. இங்கு இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் சாகுபடியாகிறது. வயநாட்டில் கணிசமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். சர்வதேச அளவில் தரமான ஏலக்காய் கேரளாவில் தான் உற்பத்தியாகிறது.ஏலக்காயை பொறுத்தவரை தொடர்ந்து மிதமான மழை கிடைக்க வேண்டும். அதிக வெயிலும், அதிக மழையும் ஆபத்தாகும். நிழல் தரும் மரங்களும் இருக்க வேண்டும். பராமரிப்பு செலவுகள் மிக அதிகமாகும். ஏக்கருக்கு ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவாகும்.ஏலக்காய் கடந்த 10 ஆண்டுகளில் கட்டுபடியான விலை கிடைப்பதை உறுதி செய்ய முடியவில்லை. கிலோவிற்கு ரூ.1500 விலை கிடைத்தால், ஒரளவிற்கு விவசாயிகளுக்கு கட்டுபடியாகும். ஆனால் அது நடக்கவில்லை.ஆறு மாதங்களுக்கு முன்பு சராசரி விலை கிலோவிற்கு ரூ. ஆயிரம் முதல் 1200 வரை கிடைத்தது. பின் மெல்ல மெல்ல விலை உயர்ந்து தற்போது கிலோ ரூ.2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு பயனில்லை. காரணம் ஏலத் தோட்டங்களில் காய் பறிப்பு முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. அடுத்த சீசன் ஆகஸ்ட்டிற்கு பின் தான் ஆரம்பமாகும். அதுவும் மழை பெய்தால் மட்டுமே. இந்த நிலையில் ஆக்சனுக்கு தினமும் ஒரு லட்சம் கிலோ காய்கள் விற்பனைக்கு வருவது எப்படி என்று தெரியவில்லை.இது தொடர்பாக ஏல விவசாயிகள் கூறுகையில், காய் எடுப்பு நடக்கும் போது விலை கிடைக்கவில்லை. இப்போது எடுப்பு முடிந்து விட்டது. தோட்டங்களில் காய் இல்லை. ஆனால் காய் வரத்தும் உள்ளது. விலையும் உயர்ந்து வருகிறது. இது எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை. இதனால் ஏல விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்த தொழிலில் உள்ள சூட்சுமத்தை ஸ்பைசஸ் வாரியத்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று புலம்புகின்றனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025