மேலும் செய்திகள்
வடுகபட்டியில் நாளை மருத்துவ முகாம்
10-Oct-2025
தாலுகா வாரியாக நாளை ரேஷன் குறைதீர் முகாம்
10-Oct-2025
பேரவை கூட்டம்
10-Oct-2025
மஞ்சப்பை இயந்திரம் பழுது
10-Oct-2025
மந்தையம்மன் கோயில் திருவிழா
10-Oct-2025
கம்பம் : கம்பம், போடி, பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக சிகிச்சை அளிக்கும் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது.அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சைகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு அதன் உள்கட்டமைப்பு, சிகிச்சை முறைகளை வைத்து காயகல்ப், லட்சயா, தேசிய தரச்சான்று விருதுகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறந்தது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் முஸ்கான் திட்டத்தை தேசிய சுகாதார இயக்கம் அறிமுகம் செய்துள்ளது.இந்த திட்டத்தின் படி குழந்தைகள் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு, பிறந்த பச்சிளங் குழந்தைகள் சிசிச்சை பிரிவு, ஊட்டச்சத்து மற்றும் மறுவாழ்வு பிரிவு ஆகிய நான்கு பிரிவுகள் இதில் அடக்கம்.தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் இந்த பிரிவுகள் தற்போது துவங்கப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார். இந்த பிரிவுகளை மாநில அளவிலான குழுவினர் முதலில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவார்கள். பின்னர் மத்திய குழுவினர் ஆய்வு செய்து சான்றிதழ் தருவார்கள். சிறப்பான சிகிச்சை மற்றும் உள்கட்டமைப்பில் தேர்வு செய்யப்படும் மருந்துவமனைகளுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கும்.மாவட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த தொகையில் 25 சதவீதத்தை டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்கலாம். குழந்தைகள் சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்தவே இந்த திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025