உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீர் குழாய் பதிப்பில் தரமற்ற பணி தடுத்து நிறுத்திய ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியம்

குடிநீர் குழாய் பதிப்பில் தரமற்ற பணி தடுத்து நிறுத்திய ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியம்

ஆண்டிபட்டி : புள்ளிமான்கோம்பை ஊராட்சிக்கு குடிநீர் குழாய் பதிப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்தில் பதிக்காததால், பணியை தொடர விடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.ஆண்டிபட்டி - சேடப்பட்டி கூட்டுக்குடி திட்டத்தில் கடைசி பகுதியில் உள்ள புள்ளிமான்கோம்பை ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 20 ஆண்டுகளாக குடிநீர் கிடைக்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் ஆண்டிபட்டி - சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வாரியம் மூலம் திம்மரசநாயக்கனூர் நீரேற்று நிலையத்தில் இருந்து 33 கி.மீ., தூரத்தில் உள்ள புள்ளிமான் கோம்பை ஊராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்ல புதிய பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது.தற்போது ஆண்டிபட்டி - புள்ளிமான் கோம்பை ரோட்டில் அணைக்கரைப் பட்டியில் இருந்து தர்மத்துப்பட்டி வரை குழாய் பதிப்புக்கான பணிகள் நடந்து வருகிறது. இப் பணி தரமின்றி நடப்பதாக கூறி ஊராட்சி நிர்வாகத்தினர் பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.ஊராட்சி தலைவர் தவசி கூறியதாவது:குழாய் பதிப்புக்கு ஒரு மீட்டர் ஆழம் வரை தோண்ட வேண்டும். தரைத்தளத்தில் குழாய் பதித்து செல்கின்றனர். ரோட்டின் ஓரத்தில் இடம் இருந்தும் பல இடங்களில் ரோட்டை ஒட்டி தோண்டி சேதப்படுத்தி வருகின்றனர்.20 ஆண்டுக்குப் பின் இப்பகுதிக்கு குடிநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பொது மக்களுக்கு தரமற்ற பணியால் ஏமாற்றம் ஏற்படுகிறது. குடிநீர் வாரிய அதிகாரிகள் இது குறித்து அக்கறை கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் பணியின் தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ