உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நுண் உரக்கூடத்தின் கருவிகள் மழையில் நனைந்து வெயிலில் காயும் அவலம்

நுண் உரக்கூடத்தின் கருவிகள் மழையில் நனைந்து வெயிலில் காயும் அவலம்

சின்னமனுார் : சின்னமனுாரில் நுண் உரக்கூடத்தின் கருவிகள் கேட்பாரற்று திறந்த வெளியில் கிடக்கிறது. இதனால் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து துருப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகரில் சேகரமாகும் குப்பையை, வீடுதோறும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்க வேண்டும். பின்னர் மக்கும் குப்பையை நுண் உரக் கூடங்களில் மக்க வைத்து, உரமாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். மக்காத குப்பையை பிளாஸ்டிக், பாலிதீன் தனியாக பிரித்து தனியார் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யலாம்.சின்னமனுாரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமையாக செயலிழந்து விட்டது. அமைக்கப்பட்ட நுண் உரக்கூடங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. குப்பை கிடங்கில் குப்பை மலைபோல் தேங்கி கிடக்கிறது.காந்தி நகர் காலனி அருகில் அமைக்கப்பட்ட நுண் உரக்கூடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. நுண் உரக் கூடத்தின் வாசலில், மக்கும் குப்பையை உரமாக்கும் இயந்திரங்கள் திறந்த வெளியில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடிக்க துவங்கி உள்ளன. உரம் தான் உற்பத்தி செய்யவில்லை. வாங்கிய கருவிகளையாவது பத்திரப் படுத்தி வைக்கலாமே. அதையும் செய்யாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் உள்ளது. நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சின்னமனுார் நகராட்சிக்கு ஆய்வு செய்து அதிகாரிகள் சுறுசுறுப்பாக பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை