உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே நிற்கும் பஸ்களால் போக்குவரத்து இடையூறு

பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே நிற்கும் பஸ்களால் போக்குவரத்து இடையூறு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் வெளியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும் பஸ்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.கொச்சி- - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி உள்ளது. ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை 2 கி.மீ.,தூரத்தில் ஆண்டிபட்டி நகரில் பஸ்ஸ்டாண்ட் உள்ளது. ஆண்டிபட்டியை மையமாக வைத்து 30க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கம்பம், போடி, தேனி உட்பட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் ஆண்டிபட்டி கடந்து செல்கிறது. இதேபோல் மதுரை, உசிலம்பட்டி வழியாக வரும் அனைத்து பஸ்களும் ஆண்டிபட்டியை கடந்து தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் கடந்த காலங்களில் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது. சமீப காலமாக ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் சென்று திரும்புவதில்லை. பஸ் ஸ்டாண்ட் எதிரில் ரோட்டில் இருபுறமும் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அடிக்கடி ஏற்படும் பிரச்னை குறித்து போலீசார் நடவடிக்கை இல்லை. ஆண்டிபட்டி கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் அன்றாடம் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக உள்ளது. ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் சென்று திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை