| ADDED : ஏப் 13, 2024 02:35 AM
தேனி : அரண்மனைப்புதுார் பகுதியில் காலையில் அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலகம் சென்றவர்கள் அவதியடைந்தனர்.போடி தொகுதிக்குட்பட் தேனி ஒன்றியம் அரண்மனைப்புதுார் பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி நேற்று காலை 8:00 மணிக்கு பிரசாரம் செய்தார். அப்போது கொடுவிலார்பட்டி, முல்லைநகர் பகுதியில் இருந்து தேனி நோக்கி சென்ற பள்ளி, கல்லுாரி பஸ்கள், மாணவர்களின் பெற்றோர் டூவீலர்கள், கார்கள் ஸ்தம்பித்து நின்றன. அரண்மனைப்புதுார் விலக்கில் இருந்து அரண்மனைப்புதுார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரும் இல்லை. இதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது. சிலர் வயல்பட்டி, வீரபாண்டி வழியாக தேனிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லுாரி நேரத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் போது மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போலீசார் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.