மேலும் செய்திகள்
பாம்பு கடித்து பெண் பலி
2 minutes ago
நாளை (அக்.,6) கலந்தாய்வு
2 minutes ago
சனிப்பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
2 minutes ago
சின்னமனூர் : சின்னமனூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் ஒழுங்குபடுத்த புதிதாக டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.சின்னமனூர் நகராட்சி 27 வார்டுகளில் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந் நகரை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் வசிப்பவர்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் சின்னமனுார் வந்து செல்கின்றனர். அதிக கிராம மக்கள் வரும் ஊராகவும், மேகமலையில் உள்ள 7 எஸ்டேட் தொழிலாளர்களும் இங்கு வருகின்றனர். சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடுகளில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியில் தவிக்கிறது. இந்த ரோடுகளில் மினி பஸ்கள் நிறுத்துவதால் அதிக போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது.சின்னமனூர் போலீசாரின் அதிகார எல்லையும் அதிகம் என்பதால் போக்குவரத்தை சீர்படுத்துவதில் கவனம் செலுத்த முடிவதில்லை. மற்ற ஊர்களில் லோக்கல் போலீசார் மாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். சின்னமனூரில் அதுவும் இல்லை. எனவே சின்னமனூருக்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியூர்களில் இருந்து ஒரு சில நாட்கள் டிராபிக் போலீசார் பெயருக்கு வந்து செல்கின்றனர். அதனால் எந்த பயனும் இல்லை. இங்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் அமைத்து நகருக்குள் வரும் வாகனங்கள், வெளியேறும் வாகனங்களை ஒரு வழிப்பாதையில் அனுப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இங்கு நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். தேனி எஸ்.பி. சிவபிரசாத் அதற்கான பரிந்துரையை அரசிற்கு அனுப்ப மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
2 minutes ago
2 minutes ago
2 minutes ago