உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்சிப்பொருளான போக்குவரத்து சிக்னல்

காட்சிப்பொருளான போக்குவரத்து சிக்னல்

போடி -: போடி பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்ட போக்குவரத்து 'சிக்னல்' 15 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி சேதம் அடைந்து உள்ளது.போடி காமராஜ் பஜார், தேவாரம் ரோடு, குப்பிநாயக்கன்பட்டி. பெரியாண்டவர் ஹை ரோடு இணையும் நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இப்பகுதியில் மேல்நிலைப் பள்ளிகள், பஸ்ஸ்டாண்ட், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளன. காலை, மாலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்கும் வகையில் 15 ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு கூண்டு, மின் இணைப்புடன் போக்குவரத்து 'சிக்னல்' அமைக்கப்பட்டன. துவங்கிய 6 மாதங்கள் மட்டுமே போலீஸ், போலீஸ் நண்பர்கள் மூலமாக செயல்பட்டன. அதன் பின் செயல்படுத்த போலீசார் முன் வராததால் தற்போது பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. தற்போது சிக்னல் சேதம் அடைந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள், மக்களும் சிரமப் படுகின்றனர். சிக்னலை பயன் பாட்டிற்கு கொண்டு வர போடி டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !