மேலும் செய்திகள்
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
03-Oct-2025
போலீஸ் செய்திகள்.....
03-Oct-2025
நாளை( அக்.,4) மின்தடை
03-Oct-2025
ரத்ததான முகாம்
03-Oct-2025
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
02-Oct-2025
தேனி : ஊரக பகுதியில் உதவி பெறும் பகுதிகளில் காலை உணவுத்திட்டத்தில் பணிபுரிய உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு தேனியில் பயிற்சி வழங்கப்பட்டது.தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஊரக பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆண்டிப்பட்டி 11, தேனி 14, உத்தமபாளையம் 18, போடி 16, சின்னமனுார் 7, கம்பம் 4, மயிலாடும்பாறை 5, பெரியகுளம் 12 என மாவட்டத்தில் 87 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் மாணவர்களுக்கு காலை உணவு சமைத்து வழங்க உள்ளனர். பணி புரிய உள்ள சுயஉதவிக்குழுவினருக்கு மகளிர் திட்டம், உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேனி முல்லை நகரில் உள்ள வட்டார மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சிவசங்கரி, வட்டார இயக்க மேலாளர் கலைவாணி, உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஸ்குமார் பயிற்சி வழங்கினர்.அதிகாரிகள் கூறுகையில், 'காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பள்ளிகளுக்கு உணவுப்பாதுகாப்பத்துறை சார்பில் உணவு தயார் செய்யப்படும் இடத்தில் சுகாதாரத்தை பின்பற்றுவது, உணவு தர சான்றிதழ் பெறுவது பற்றியும் விளக்கப்பட்டது' என்றனர்.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
02-Oct-2025