உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரு சிறுமிகள் மாயம்

இரு சிறுமிகள் மாயம்

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே குமணன் தொழுவை சேர்ந்தவர் பாலமுருகன், இவரது மகள் பாண்டீஸ்வரி 14, குமணன்தொழு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன் தினம் மாலையில் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவர் பின்னர் பக்கத்து வீட்டிற்கு சென்று வீட்டுப்பாடம் எழுதிவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தாயார் ராஜாத்தி புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.கடமலைக்குண்டு நேருஜி நகர் மகேஸ்வரி 34,இவரது மூத்த மகள் திவ்யாஸ்ரீ 16, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் கடமலைக்குண்டில் தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வந்தார். நேற்று முன் தினம் வழக்கம் போல் கம்ப்யூட்டர் வகுப்பிற்கு செல்வதாக கூறி சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. குறித்து மகேஸ்வரி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை