உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டி அருகே டூவீலர்கள் மோதல்: பெண் பலி

ஆண்டிபட்டி அருகே டூவீலர்கள் மோதல்: பெண் பலி

ஆண்டிபட்டி: உசிலம்பட்டி அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் கேப்டன் 43, தனது மனைவி ஈஸ்வரி 35, என்பவரை இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஆண்டிபட்டிஅருகே உறவினரின் இறப்பு நிகழ்வில் பங்கேற்க சென்றார்.ஆண்டிபட்டி டி. ராஜகோபாலன்பட்டி விலக்கு அருகே சென்றபோது டி.புதூரைச் சேர்ந்த சிவன்காளை என்பவர் ஒட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கேப்டன்சென்ற வாகனத்துடன் நேருக்கு நேர்மோதியது.கீழே விழுந்ததில் பின் தலையில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரியை ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை