உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன்படி காலாண்டிற்கு 10ம்வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.600, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.900, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 1200, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.1800 மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வரும் நிறைவடைந்திருந்தால் போதுமானது. இவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ.ஆயிரம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 வயதிற்குமிகாமலும், மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி பட்டதாரிகள் விண்ணப்பிக்க இயலாது.விண்ணப்பத்தினை http://tnvelaivaaippu.gov.inஎன்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்து செய்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ