உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை ஆர்ச் ரோடு விரிவாக்கம்

வைகை அணை ஆர்ச் ரோடு விரிவாக்கம்

ஆண்டிபட்டி: வைகை அணை -க.விலக்கு நெடுஞ்சாலை ரோட்டில் 'ஆர்ச்' அருகே குரியம்மாள்புரம் ரோடு சந்திப்பில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.வளைவான இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. விபத்தை தடுக்கும் விதமாக ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு ரோட்டின் மத்தியில் பாதுகாப்பு மைய தடுப்பு அமைக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதி ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் கூறியதாவது: தேவதானப்பட்டி - வருஷநாடு ரோட்டில் கடந்த சில ஆண்டுகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. போக்குவரத்து அதிகரிப்பதை தொடர்ந்து ரோட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வைகை அணை 'ஆர்ச்' அருகே ரூ.90 லட்சம் மதிப்பில் ரோடு விரிவாக்கத்துடன் குறிப்பிட்ட தூரம் ரோட்டின் மத்தியில் மையத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்பகுதியில் போக்குவரத்துக்கு வசதியாக அடையாளக் கோடுகளும் உள்ளன. உள்ளாட்சி நிர்வாகம் மூலம் இப்பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைத்து பராமரிக்கலாம். வளர்ந்துவரும் இப்பகுதி இரவில் வரும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தருவதாக அமையும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை