உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வஞ்சி ஓடைப்பாலம் தடுப்பு சுவர் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்

வஞ்சி ஓடைப்பாலம் தடுப்பு சுவர் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி: போடி புதுக்காலனி பரமசிவன் கோயிலுக்கு செல்லும் ரோட்டில் அமைந்து உள்ள சுப்புராஜ் நகர் வஞ்சி ஓடைப் பாலத்தின் அடிப்பகுதி முழுவதும் அரிப்பு ஏற்பட்டும், தடுப்புச்சுவர் சேதம் அடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.போடி நகராட்சிக்கு உட்பட்ட சுப்புராஜ்நகர், புதுக்காலனி, பரமசிவன் கோயில், தனியார் பள்ளி, ஆதிபராசக்தி கோயில், 8, 9, 10 வது வார்டுகளுக்கு செல்லும் முக்கிய பாதையில் வஞ்சி ஓடைப்பாலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். வஞ்சி ஓடைப் பாலம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது பாலத்தின் அடிப்பகுதி முழுவதும் அரிப்பு ஏற்பட்டும், தடுப்புச் சுவர் முழுவதும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாகியும் சீரமைக்காததால் கார், வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள பாலம் தடுப்புச்சுவர் சேதம் அடைந்ததை தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். விபத்து ஏற்படும் முன் சேதம் அடைந்த பாலத்தை சீரமைப்பதோடு, புதிதாக தடுப்புச் சுவர் அமைத்திட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி