உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடல் திரளான பக்தர்கள் பங்கேற்பு

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடல் திரளான பக்தர்கள் பங்கேற்பு

தேனி: தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக கோயிலில் திருக்கம்பம் நடும் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படும். இத் திருவிழாவில் துவக்க நிகழ்ச்சியான திருக்கம்பம் நடும் விழா நேற்று நடந்தது. முன்னதாக திருக்கம்பம் கோயில் வீட்டில் இருந்து முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையில் உள்ள கண்ணீஸ்வர முடையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக கவுமாரியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் மண்டபத்தில் திருக்கம்பம் நடும் விழா நடந்தது. திருக்கம்பத்திற்கு மஞ்சள், தீர்த்தம் உள்ளிட்டவையால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஹிந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்காளர் பழனியப்பன், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், மண்டகபடி தார்கள் பங்கேற்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கம்பம் நடுதலை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். இவர்கள் தினமும் முல்லையாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கம்பத்திற்கு ஊற்றி வழிபாடுவார்கள்.மே 7 ல் சுவாமி திருவாபரபணப்பெட்டி கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு கொண்டுவரப்படுகிறது. மே 8 ல் அம்மன் முத்துப்பல்லக்கு, மே 9ல் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. மே 10 மாலையில் தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மே 13ல் தேர் நிலைக்கு வருகிறது. மே 14ல் ஊர்பொங்கள், 15ல் மஞ்சள்நீராட்டு விழா நடக்கிறது.கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், 'பக்தர்கள் தற்போது அங்கபிரதட்சனை,ஆயிரம் கண்பானை நேர்த்தி கடன் செய்யலாம். அக்னி சட்டி மற்றும் காவடி எடுப்பது உகந்ததல்ல. மே 7 முதல் 14 வரை திருவிழா நாட்களில் நேர்த்திக்கடன் செலுத்துவது சிறந்ததாகும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை