கார் - டூவீலர் விபத்தில் மனைவி பலி , கணவர் காயம்
ஆண்டிபட்டி: தேனி அருகே பள்ளபட்டி பாண்டியராஜபுரம் பால்ச்சாமி 52. தனது மனைவி ராஜம்மாளுடன் 45, டூவீலரில் க.விலக்கு சிலோன் காலனி அருகே சென்றார். மெயின்ரோட்டின் வலது புறமாக திருப்பியபோது, பின்னால் சென்ற கார், டூவீலர் மீது மோதி விபத்து நடந்தது. பலத்த காயம் அடைந்த ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். பால்ச்சாமி காயத்துடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய செக்கானூரணி கண்ணனிடம் 41, க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.