உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டு மாடு தாக்கி பெண் காயம்

காட்டு மாடு தாக்கி பெண் காயம்

தேனி: தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி தெலுங்கு பஜார் தெரு உமா 50. இவரது மூத்த சகோதரி மகன் கண்ணன்.இவர் கடந்த 2 வாரங்களாக மாந்தோப்பில் வேலை செய்து வந்தார். நேற்றுக் காலையில் உமா , கண்ணனுக்கு சாப்பாடு கொண்டு சென்றார். அப்போது வீரப்ப அய்யனார் கோயில் அருகே கண்ணன் வேலை செய்த மாந்தோப்பிற்கு சென்றபோது, காட்டு மாடு வந்து பின்புறமாக உமாவை முட்டி தாக்கியது.இதில் வலது பின்புற முதுகுகில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்சில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை