மேலும் செய்திகள்
வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி
26-Feb-2025
கடமலைக்குண்டு: 'வருஷநாடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில், பெண்ணின் பொய்யான புகார்தான் தற்கொலைக்கு காரணம்.' என, இறந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.வருஷநாடு அருகே காமராஜபுரம் செல்வி 50. இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னமுனியாண்டி 60, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக அப்பெண், வருஷநாடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்தனர். இதில், சின்னமுனியாண்டி மன விரக்தியில் வருஷநாடு வைகை ஆற்றங்கரையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சின்னமுனியாண்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள், செல்வி முன்பகையை மனதில் வைத்து சின்ன முனியாண்டி மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்து தற்கொலைக்கு துாண்டியதாக தெரிவித்தனர். பொய்யான புகார் கொடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இறந்தவர் உடலை வாங்க மறுத்து ரோடு மறியல் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இறந்த சின்ன முனியாண்டியின் மனைவி முத்துமாரி இப்பிரச்னை குறித்து தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
26-Feb-2025