உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எழுத்தாளருக்கு பாராட்டு விழா

எழுத்தாளருக்கு பாராட்டு விழா

தேனி தமிழக அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற எழுத்தாளர் சுப்பிரமணிக்கு தேனி முல்லைப்பெரியாறு முத்தமிழ் மன்றம், என்.ஆர்., அழகர்ராஜா கல்வி அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். டாக்டர் பாஸ்கரன், தொழில் உரிமையாளர் பிரபு முன்னிலை வகித்தனர். வர்த்தகர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர். முல்லைப்பெரியாறு முத்தமிழ் மன்ற நிறுவனர் பன்னீர்செல்வம் விழாவை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !