தேனியில் மாநில குழு விளையாட்டு போட்டிகள் 10ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
தேனி:தேனி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின, 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் பிப்.,6 முதல் 11 வரை, நடக்கிறது. இதில் 10ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 14,17 வயதிற்குட்பட்ட பிரிவில் தடகள, குழு விளையாட்டு போட்டிகள் மாணவர்கள், மாணவிகள் என தனித்தனியாக நடக்கிறது. மாவட்ட போட்டிகள் அந்தந்த மாவட்டங்களில் இரு மாதங்களாக நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்கின்றனர்.இப்போட்டிகளில் 14 வயதிற்குட்பட்ட மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் கால்பந்து, கபடி, வாலிபால், கைப்பந்து, எரிபந்து, கோ-கோ, இறகுபந்து, டென்னிஸ், ஹாக்கி, கூடைப்பந்து, பூப்பந்து, டேபிள் டென்னிஸ் போட்டிகள் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிப்.6 முதல் 11 வரை நடக்கிறது. தலா 5172 மாணவர்கள், மாணவிகள் பங்கேற்கின்றனர்.